/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு? வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
ADDED : ஜூலை 05, 2025 01:12 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டிபுதுாரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவரது தோட்டத்தில், கால்நடைகளுக்கு வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார்.
நேற்று மாலை, 5:00 மணிக்கு, அந்த கட்டுகள் தீப்பற்றி எரிந்தது. உடனே பன்னீர்செல்வம் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், 5:30 மணிக்கு வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதில், 20,000 ரூபாய் மதிப்பில் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமாகின. மர்ம நபர்கள் தீ வைத்ததாக, பன்னீர்செல்வம் அளித்த புகார்படி கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.