/உள்ளூர் செய்திகள்/சேலம்/'பேக்' திருடும் வாலிபர் வீடியோ 'வைரல்''பேக்' திருடும் வாலிபர் வீடியோ 'வைரல்'
'பேக்' திருடும் வாலிபர் வீடியோ 'வைரல்'
'பேக்' திருடும் வாலிபர் வீடியோ 'வைரல்'
'பேக்' திருடும் வாலிபர் வீடியோ 'வைரல்'
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
ஆத்துார்: ஆத்துார், கண்ணாடி மில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 48.
இருசக்கர வாகன பழுதுபார்ப்பு தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் மளிகை பொருட்கள் வாங்க, ஆத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று மொபட்டை நிறுத்தி உள்ளே சென்றார். திரும்பி வந்தபோது, மொபட்டில் இருந்த, 'பேக்'கை காணவில்லை. சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் தெரிவித்தார்.கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு பெண்ணுடன் பைக்கில் வந்த வாலிபர், பேக்கில் பணம் இருக்குமோ என்ற எண்ணத்தில் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. ஆனால் பேக்கில் வாட்டர் கேன், 'பிளாஸ்க்' மட்டும் இருந்ததாக, வெங்கடேசன் நிம்மதி அடைந்தார். இருப்பினும் பேக் திருடிய வீடியோ காட்சி, வாட்ஸாப் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.