Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'

பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'

பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'

பைக்கில் பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ 'வைரல்'

ADDED : ஜூன் 21, 2024 07:28 AM


Google News
தலைவாசல் : சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. அந்த சாராயத்தை சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலுார் மாவட்ட பகுதிகளில் வியாபாரிகள் மூலம் விற்கப்படுகின்றன. வியாபாரிகள், நெருங்கிய வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்டு சாராயம் விற்பது தொடர்ந்து வருகிறது.அதன்படி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானில் பைக்கில் கள்ளச்சாராயம் பாக்கெட் கொண்ட மூட்டையை வைத்து, 'டோர் டெலிவரி' முறையில் வாடிக்கையாளர்களை தேடிச்சென்று விற்கும் வீடியோ, வாட்ஸாப் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது. தற்போது கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தலைவாசலில் சாராயம் விற்கும் வீடியோ பரவுவது, போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பழைய வீடியோவை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்' என்றனர்.

அறிக்கை நீக்கம்இந்நிலையில் சேலம் எஸ்.பி., அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. அதில், 'பாக்கெட் சாராயம் விற்பது போன்ற வீடியோ, கடந்த ஏப்ரலில் எடுக்கப்பட்டது. அதில் உள்ளவர் மீது தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதனால் பரவி வரும் வீடியோ, போட்டோ, சில மாதங்கள் முன் எடுக்கப்பட்டவை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.ஆனால் அறிக்கை வெளியிடப்பட்ட, 30 நிமிடங்களில் நீக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us