/உள்ளூர் செய்திகள்/சேலம்/பரவும் காய்ச்சல்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுபரவும் காய்ச்சல்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
பரவும் காய்ச்சல்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
பரவும் காய்ச்சல்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
பரவும் காய்ச்சல்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 21, 2024 07:28 AM
ஓமலுார் : லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி செல்வராணி தலைமை வகித்தார். அதில் டவுன் பஞ்சாயத்து அலுவலகம், முக்கிய இணைப்பு சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தல், ஓமலுார் தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்தை, நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு கருத்துருவை, கலெக்டர் வழியே அரசுக்கு அனுப்புவது உள்பட, 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெங்கடேஷ், அன்பழகன் பேசுகையில், ''3 மாதங்களாக, 15 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கவில்லை. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் 'ப்ளீச்சிங் பவுடர்' போடுவது கிடையாது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது,'' என்றனர். அதற்கு செல்வராணி, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தொடர்ந்து, 'பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன; டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டும்' என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். பின் அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவி புஷ்பா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.