/உள்ளூர் செய்திகள்/சேலம்/கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை நிறுத்த வலியுறுத்தல்கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை நிறுத்த வலியுறுத்தல்
கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை நிறுத்த வலியுறுத்தல்
கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை நிறுத்த வலியுறுத்தல்
கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை நிறுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 01:00 AM
சேலம் : ''கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை, மாநகராட்சி நிறுத்த வேண்டும்,'' என, தி.மு.க., கவுன்சிலர் சீனிவாசன் வலியுறுத்தினார்.
சேலம் மாநகராட்சி கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கமிஷனர் பாலச்சந்தர், காங்., கட்சியின் துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர்.
அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:இமயவர்மன் (வி.சி.,): மத்திய அரசின், 3 சட்ட திருத்தங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாய் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.பவுமிகா தப்சிரா (தி.மு.க.,): பட்டைக்கோவில் முதல் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.குணசேகரன்(தி.மு.க.,): சாலை, கழிவுநீர் கால்வாய் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமான பணிகள், பாதியில் நிற்பதோடு தாமதமாகின்றன.தெய்வலிங்கம்(தி.மு.க.,): நெடுஞ்சாலைகளில் உள்ள சாக்கடை கால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.சீனிவாசன்(தி.மு.க.,): குடிநீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும். கைத்தறி, விசைத்தறி தொ-ழில் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியை, மாநகராட்சி நிறுத்த வேண்டும்.சரவணன்(தி.மு.க.,): என் வார்டில், 3 ஆண்டுகளாக சாக்கடை வசதியை செய்து கொடுக்க முடியவில்லை. இப்பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும். தனலட்சுமி(தி.மு.க.,): என் வார்டில், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் சிரமப்படுவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரதராஜ்(அ.தி.மு.க.,): 60வது வார்டில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்குகிறது. குறிஞ்சி நகர் ஓடையை சீரமைக்க வேண்டும்.கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன்(தி.மு.க.,): சீலநாயக்கன்பட்டியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க மாநகராட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருஞானம்(தி.மு.க.,): அம்மாபேட்டையில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அங்குள்ள உபகரணங்கள் வீணாகும் நிலையில் உள்ளன. குமரகிரி ஏரியை சுத்தப்படுத்த வேண்டும். மின்விளக்குகள் கூடுதலாக ஒதுக்க வேண்டும்.பூங்கொடி(தி.மு.க.,): தெருக்களில் குறைந்தது, 10 நாய்களுக்கு மேல் சுற்றி திரிகின்றன.இதையடுத்து கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.கமிஷனர்: வாய்க்கால்பட்டறையில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் மாதத்துக்கு, 100 ஆக இருந்த அறுவை சிகிச்சை, 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக சூரமங்கலத்தில் நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தவிர நவீனமாக்கப்பட்ட நாய்கள் கருத்தடை சிகிச்சை மையம், 3 கோடி ரூபாயில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் விரைவில் ஏற்படுத்தப்போகிறோம். இதனால் காலப்போக்கில் நாய்கள் பிரச்னை குறையும்.மேயர்: மாநகரில் சாக்கடை கால்வாய் சீரமைக்க, 135 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கப்பட்டதும் பணி மேற்கொள்ளப்படும். மற்ற அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.