/உள்ளூர் செய்திகள்/சேலம்/200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

ஊறல் அழிப்பு
சங்ககிரி, பரையங்காட்டானுாரில், டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் காய்ச்ச, 100 லிட்டர் ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதை கொட்டி அழித்தனர். ஊறல் போட்ட, அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 65, என்பவரை கைது செய்தனர்.
எச்சரிக்கை
புழுதிக்குட்டை, புங்கமடுவு, பெரியகுட்டி மடுவு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்ற, 4 பேரை, நேற்று காலை, 9:00 மணிக்கு வாழப்பாடி ஸ்டேஷனுக்கு, போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, 'இனி கள்ளச்சாராயம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தனர். அதேபோல் மலைப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
சந்துக்கடை மீது நடவடிக்கை
மேட்டூரில் சப் - கலெக்டர் பொன்மணி தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. அதில் கொளத்துார் காவிரி கரையோரம், மறுகரையிலுள்ள தர்மபுரி மாவட்டம், ஏமனுார், கர்நாடகா மாநிலம், கோபிநத்தம் பகுதியில் இருந்து கள்ளச்சாராய பாக்கெட்டுகளை, பரிசலில் கொளத்துார் பகுதி கிராமங்களுக்கு கடத்துவதாக, வி.ஏ.ஓ.,க்கள் கூறினர். அவ்வாறு கள்ளச்சாராயம் கடத்துவோர், விற்போர், கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக சந்துக்கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த கடைகளுக்கு, 'சீல்' வைக்கவும் வி.ஏ.ஓ., - போலீசாருக்கு சப் -கலெக்டர் உத்தரவிட்டார். கலால் தாசில்தார் சுமதி, கருமலைக்கூடல் போலீசார், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.
காடையாம்பட்டி தாலுகா
காடையாம்பட்டி தாலுகா கணவாய்புதுார் ஊராட்சியில் பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. குறிப்பாக பூமரத்துார், வீராச்சியூர், கண்ணப்பாடி, சுரக்காபட்டி, கொண்டையூர், ஏற்காட்டை சேர்ந்த கொலவூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் சாராய நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் தீவட்டிப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையில் போலீசார் நேற்று, பூமரத்துார், வீராச்சியூர், கணவாய்புதுார் மலை கிராமங்களில் வீடுதோறும் சென்று, மலை பகுதியில் ஊறல் போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.