/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இரு தொழில் திறன் பயிற்சி;27ல் பெண்களுக்கு அழைப்பு இரு தொழில் திறன் பயிற்சி;27ல் பெண்களுக்கு அழைப்பு
இரு தொழில் திறன் பயிற்சி;27ல் பெண்களுக்கு அழைப்பு
இரு தொழில் திறன் பயிற்சி;27ல் பெண்களுக்கு அழைப்பு
இரு தொழில் திறன் பயிற்சி;27ல் பெண்களுக்கு அழைப்பு
ADDED : செப் 22, 2025 01:35 AM
சேலம்;இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் அறிக்கை: மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, அகமதாபாத்தை சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம், தொழில் முனைவோராக விரும்பும், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய இரு திறன் பயிற்சி அளிக்க உள்ளது.
டைலரிங், உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்த ஒரு மாத, இலவச பயிற்சி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது. அதில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும். பயிற்சி முடிப்பவருக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ் விண்ணப்பித்து வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், 88258 - 12528 என்ற எண்ணுக்கு, விபரங்களை குறுந்செய்தியாக அனுப்ப வேண்டும். மேலும் வரும், 27ல், சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில் நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.