ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு
ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு
ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு
ADDED : செப் 22, 2025 01:35 AM
ஏற்காடு:ஏற்காட்டில் ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. அதேபோல் நேற்று காலை முதல் வெயில் அடித்தது.
வழக்கம்போல் இரவு, 9:30 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி முழுதும் கனமழை பெய்தது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்றனர். ஒரு வாரமாக தொடரும் மழையால், ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.