/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காரீப் பருவ பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி காரீப் பருவ பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
காரீப் பருவ பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
காரீப் பருவ பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
காரீப் பருவ பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 03, 2025 02:40 AM
பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுாரில், கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு, 'அட்மா' திட்டத்தில், காரீப் பருவ பயிர் பாதுகாப்பு முறை குறித்த பயிற்சி நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தலைமை வகித்து, காரீப் பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நெல் பயிரிட்டு கூடுதல் மகசூல் பெறுவது குறித்து அறிவுரை வழங்கினார்.
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுனர் ரவி, கடைப்பிடிக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள், மஞ்சள் பயிரில் ஏற்படும் நோய்கள், அதற்கான தீர்வு குறித்து விளக்கினார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, கிராம வேளாண் முன்னேற்ற குழுவின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். அட்மா உதவி மேலாளர் ரேணுகா, தோட்டக்கலை உதவி
அலுவலர் சுகுமார், பயிற்சி அளித்தனர்.