Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் வைபவம்

மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் வைபவம்

மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் வைபவம்

மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் வைபவம்

ADDED : செப் 03, 2025 02:39 AM


Google News
சேலம், புராண காலத்தில் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன், வைகை ஆற்றில் கரை கட்டும் பணிக்கு, வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என உத்தரவிட்டான்

. அப்போது, 'வந்தி' என்ற சிவபக்தையான மூதாட்டிக்கு, ஈசனே மனித வடிவில் வந்து, அவள் தந்த பிட்டுக்கு பதில், கரை கட்ட, மண் சுமக்கும் பணி செய்தார். சரியாக வேலை செய்யாத ஈசனின் முதுகில், மேற்பார்வையாளர் பிரம்பால் அடித்த அடி, உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் வலித்தது. இந்த திருவிளையாடலை நினைவு கூறும்படி, நேற்று சேலம் சுகவனேஸ்வரர் தலை மீது, கூடையில் மண் சுமப்பது போன்ற அலங்காரம் செய்து, திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us