ஆடு வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி
ஆடு வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி
ஆடு வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : மே 30, 2025 02:25 AM
சேலம் :'லாபம் முறையில் ஆடு வளர்க்கும் முறைகள் மற்றும் அரசின் தொழில் முனைவோர் திட்டம்' தலைப்பில், சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. பல்கலை இயக்குனர் அப்பா ராவ் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை சேலம் மண்டல இணை இயக்குனர் பாரதி முன்னிலை வகித்தார். அதில் சேலம் கோட்ட உதவி இயக்குனர் ரகுபதி பங்கேற்றார்.
பல்கலை தலைவர் வடிவு உள்ளிட்ட பேராசியர்கள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அதில் ஆடு வளர்ப்பின் முக்கியத்துவம், வங்கி கடனுதவி, தேசிய கால்நடை இயக்கத்தின், 'உதயமித்ரா' திட்டத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் ஆடு வளர்ப்பு மேலாண் வழிமுறைகள், ஆட்டுக்குட்டிகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 100 விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு, சான்றிதழ் வழங்கப்பட்டன.