/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க ஜூன் 16 வரை அவகாசம் பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க ஜூன் 16 வரை அவகாசம்
பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க ஜூன் 16 வரை அவகாசம்
பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க ஜூன் 16 வரை அவகாசம்
பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க ஜூன் 16 வரை அவகாசம்
ADDED : மே 30, 2025 02:25 AM
ஓமலுார், பெரியார் பல்கலை வெளியிட்ட அறிக்கை: பெரியார் பல்கலை துறைகள், தர்மபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம் ஆகியவற்றில், 2025 - 26 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மாணவர்கள் நலன் கருதி, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், வரும் ஜூன், 16 வரையும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய துறைகளில் சமர்ப்பிக்க, ஜூன், 23 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் வழியே, பெரியார் பல்கலையில் உள்ள, 27 துறைகளில் முதுநிலை பட்டம், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு, முதுநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு என, 46 படிப்புகளுக்கும், தர்மபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையத்தில், 8 துறைகளில், 8 முதுநிலை படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.