/உள்ளூர் செய்திகள்/சேலம்/ . இன்று முதல் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் . இன்று முதல் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
. இன்று முதல் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
. இன்று முதல் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
. இன்று முதல் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 23, 2025 02:00 AM
சேலம், :சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, முள்ளுவாடி கேட் ரயில்வே கேட் பகுதியில் ரயில்கள் கடந்து செல்லும் போது, இரு புறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை கட்டுப்படுத்தும் வகையில், செரிரோடு பகுதியில், 130 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், அஸ்தம்பட்டியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும், ரயில்வே மேம்பாலம் வழியாகதான் செல்கின்றன. எனவே முள்ளுவாடி கேட்டின், மற்றொரு ரயில்வே கேட் பாதையான பிரட்ஸ் ரோட்டில், 72 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகள் இன்று முதல் நடைபெற உள்ளதால் முள்ளுவாடி கேட் மூடப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
எனவே, மாற்று பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.