/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தத்தை கண்டித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தத்தை கண்டித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தத்தை கண்டித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தத்தை கண்டித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தத்தை கண்டித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2025 01:59 AM
சேலம் :மத்திய அரசு, தொழிலாளர் நல சட்டங்களில் கொண்டு வந்துள்ள திருத்தத்தை கண்டித்து, சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி, மத்திய அரசு கடந்த, 2020 செப்.,22ல் திருத்தம் செய்தது. இது தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் கறுப்பு தினம் என தொழிற்சங்கத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை முன், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் எல்.பி.எப்., சங்க நிர்வாகி பழனியப்பன் தலைமையில், கறுப்பு கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 100 ஆண்டுகள் போராடி, தொழிலாளர்கள் பெற்ற சட்டங்களை திருத்தங்கள் மூலம் சீரழித்து விட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, பன்னீர்செல்வம், முருகேசன், ஏ.ஐ.டி.யு.சி.,- ஐ.என்.டி.யு.சி., யூ.டி.யூ.சி., - ஏ.ஐ..சி.சி.டி., மற்றும் ஹெச்.எம்.எஸ்., தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.