/உள்ளூர் செய்திகள்/சேலம்/நாளை 6 ஒன்றியங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்நாளை 6 ஒன்றியங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
நாளை 6 ஒன்றியங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
நாளை 6 ஒன்றியங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
நாளை 6 ஒன்றியங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 2ம் கட்டமாக, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், 20 ஒன்றியங்களில் உள்ள, 367 கிராம ஊராட்சிகளில், நாளை முதல் ஆக., 6 வரை, 92 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முதல் நாளில், 6 இடங்களில் முகாம் நடத்தப்பட உள்ளன. அதன்படி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி, குள்ளம்பட்டி, குப்பனுார், பூவனுார், சுக்கம்பட்டி, வலசையூர் கிராமங்களுக்குரிய முகாம், வலசையூர் பெரியசாமி உடையார் மகாலில் நாளை நடக்கிறது.அதேபோல் ஓமலுார் ஒன்றியத்தில் உள்ள காமலாபுரம், பொட்டியபுரம் கிராம முகாம் காமலாபுரம் கிராம சேவை மையத்திலும், தலைவாசல் ஒன்றியத்தில் கவர்பனை, லத்துவாடி, திட்டச்சேரி, பகடப்பாடி, கிழக்குராஜபாளையம் கிராம முகாம், லத்துவாடி ஊராட்சி சேவை மையத்திலும் நடக்கிறது.வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள எட்டிமாணிக்கம்பட்டி, மருளையம்பாளையம், பாப்பாரப்பட்டி, சென்னகிரி, ராஜாபாளையம், இனாம் பைரோஜி கிராம முகாம், ராஜாபாளையம் ருக்மணி திருமண மண்டபத்தில் நடக்கிறது.மகுடஞ்சாவடி ஒன்றியம் வைகுந்தம், காளிகவுண்டம்பாளையம், அ.தாழையூர், கன்னந்தேரி கிராம முகாம், வைகுந்தம் குலாலர் திருமண மண்டப கரியவரதராஜ பெருமாள் கோவிலிலும், மேச்சேரி ஒன்றியம் கொப்பம்பட்டி, எம்.காளிப்பட்டி, மல்லிகுந்தம் கிராம முகாம், விஜயமகால் திருமண மண்டபத்திலும் நடக்கிறது.முகாம்களில், மக்கள் அதிகம் அணுகும், 15 துறைகள் வாயிலாக, 44 வகை சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் உரிய முறையில் முகாம் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.