/உள்ளூர் செய்திகள்/சேலம்/வரத்து அதிகரிப்பால் இறங்குமுகத்தில் தக்காளிவரத்து அதிகரிப்பால் இறங்குமுகத்தில் தக்காளி
வரத்து அதிகரிப்பால் இறங்குமுகத்தில் தக்காளி
வரத்து அதிகரிப்பால் இறங்குமுகத்தில் தக்காளி
வரத்து அதிகரிப்பால் இறங்குமுகத்தில் தக்காளி
ADDED : ஜூலை 25, 2024 01:41 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்-பட்டி, ஏத்தாப்பூர், ஆத்துார், நரசிங்கபுரம், கல்வராயன்மலை உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தலைவாசல் தினசரி காய்-கறி மார்க்கெட்டுக்கு தக்காளி, வெண்டை, கத்தரி, புடலை உள்-ளிட்ட காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் பெங்களூருவில் கன மழையால் தக்காளி வரத்து குறைந்தது. தவிர உள்ளூர் தக்காளியும் போதிய அளவில் வர-வில்லை. இதனால் தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் கிலோ, 60 முதல், 70 ரூபாய்க்கு விற்றது. ஆனால் நேற்று முன்தினம் தக்-காளி கிலோ, 40 முதல், 60 ரூபாயாக சரிந்தது. வெளி மார்க்-கெட்டில் கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, கிலோ, 30 முதல், 50 ரூபாயாக மேலும் சரிந்தது. வெளிமார்க்கெட்டில் கிலோ 60 ரூபாயாக குறைந்தது. உள்ளூர், வெளியூரில் இருந்து, தக்காளி கணிசமான அளவில் வரத்தொடங்கி உள்ளதால், தக்காளி விலை குறைந்து வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் ரூ.40ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம், ஒட்டன்-சத்திரம், ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து தக்காளி வரத்தா-கிறது. தினமும், 5,000 முதல், 8,000 பெட்டிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரத்தாகும். கடந்த ஒரு வாரமாக கிலோ தக்காளி, 60 முதல், 80 ரூபாய் வரை விற்பனையானது. வரத்து குறைவு, முகூர்த்த சீசன் போன்றவைகளால் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஆடி மாதம் துவங்கியது முதல் முகூர்த்த சீசன் முடிந்ததுடன், வரத்தும் சற்று அதிகரித்துள்ளது. மழை இல்-லாததாலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தாளவாடி, தாரா-புரம், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து கடந்த, மூன்று நாட்க-ளாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஈரோடு மார்க்கெட்-டுக்கு, 6,000 பெட்டிகள் வரை தக்காளி வரத்தானது. இதனால் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. இன்னும் சில நாட்க-ளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்பதால், மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.