Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,360 வீழ்ச்சி

2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,360 வீழ்ச்சி

2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,360 வீழ்ச்சி

2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,360 வீழ்ச்சி

ADDED : ஜூலை 25, 2024 01:41 AM


Google News
சேலம்: இறக்குமதி வரி குறைப்பால், சேலத்தில், 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு, 2,360 ரூபாய் சரிந்துள்ளது.சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய பட்-ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி, 15ல் இருந்து, 6 சதவீத-மாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை சரியத்தொடங்கி-யது. கடந்த, 22ல், சேலத்தில் தங்கம் கிராம், 6,770, பவுன், 54,160 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் கிராமுக்கு, 270 குறைந்து, 6,500 ரூபாய், பவுனுக்கு, 2,160 குறைந்து, 52,000 ரூபாய்க்கு விற்-றது. நேற்று மீண்டும் விலை குறைந்தது. அதன்படி கிராமுக்கு, 25 குறைந்து, 6,475 ரூபாய், பவுனுக்கு, 200 குறைந்து, 51,800 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு, 295 ரூபாய், பவுனுக்கு, 2,360 ரூபாய் குறைந்-துள்ளது. கடந்த, 17ல் தங்கம் கிராம், 6,875, பவுன், 55,000 ரூபாய்க்கு எகிறியது. இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது பவு-னுக்கு, 3,200 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் கடந்த, 22ல் வெள்ளி கிராம், 95, பார் வெள்ளி, 95,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் கிராமுக்கு, 5 குறைந்து, 90 ரூபாய், பார் வெள்ளி, 5,000 குறைந்து, 90,000 ரூபாய்க்கு விற்றது. ஆனால் நேற்று கிராமுக்கு, 1 உயர்ந்து, 91 ரூபாய், பார் வெள்ளி, 1,000 உயர்ந்து, 91,000 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us