/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று 13ம் ஆண்டாக சீதா திருக்கல்யாணம் இன்று 13ம் ஆண்டாக சீதா திருக்கல்யாணம்
இன்று 13ம் ஆண்டாக சீதா திருக்கல்யாணம்
இன்று 13ம் ஆண்டாக சீதா திருக்கல்யாணம்
இன்று 13ம் ஆண்டாக சீதா திருக்கல்யாணம்
ADDED : மே 25, 2025 01:14 AM
சேலம், சேலம் சந்திரசேகரன் - கமலம் பவுண்டேஷன் சார்பில், 13ம் ஆண்டு சீதா திருக்கல்யாண உற்சவம், சீரங்கபாளையம் டி.ஆர்.எஸ்., மண்டபத்தில் நேற்று தொடங்கியது. கணபதி யாகம் முடிந்து, 10:00 மணிக்கு கலைமாமணி உடையாளூர் கல்யாணராமன் பாகவதர் குழுவினரின், அஷ்டபதி பஜனை தொடங்கியது.
மாலையில் ஆடிட்டர் ஸ்ரீராமன் குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சேலம் அரசு இசைக்கல்லுாரி முதல்வர் சங்கரராமன் குழுவினர் பக்தி இன்னிசை கச்சேரி, குமாரி லாவண்யா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. இரவு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று காலை, 8:00 மணி முதல், சீதா திருக்கல்யாண உற்சவம், திருமாங்கல்ய தாரணம், அறுசுவை கல்யாண விருந்து, ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.