/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி.மு.க., 4 ஆண்டு சாதனை: துண்டு பிரசுரம் வினியோகம் தி.மு.க., 4 ஆண்டு சாதனை: துண்டு பிரசுரம் வினியோகம்
தி.மு.க., 4 ஆண்டு சாதனை: துண்டு பிரசுரம் வினியோகம்
தி.மு.க., 4 ஆண்டு சாதனை: துண்டு பிரசுரம் வினியோகம்
தி.மு.க., 4 ஆண்டு சாதனை: துண்டு பிரசுரம் வினியோகம்
ADDED : மே 25, 2025 01:14 AM
மேட்டூர் :தி.மு.க., அரசு, 2021ல் ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டு முடிந்து, 5ம் ஆண்டு நடக்கிறது. இதனால், 4 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரத்தை வழங்கும் விழா, மேட்டூர் நகராட்சியில் நேற்று நடந்தது. நகர செயலர் காசி விஸ்வநாதன் தலைமையில், மாவட்ட துணை செயலர் எலிசபெத் ராணி, நகர தலைவர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், மேட்டூர் மின்பணிமனை சாலை, பஸ் ஸ்டாண்ட், சதுரங்காடி, தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், மக்களுக்கு, சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை வழங்கினர்.
அதேபோல் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்த
நாயக்கன்பாளையம் பகுதிகளில் வீடுதோறும் சென்ற, தி.மு.க., நிர்வாகிகள், மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேற்கு மாவட்டம் சார்பில், தாரமங்கலத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் தலைமையில், நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர், மக்களிடம், துண்டு பிரசுரத்தை வழங்கினர்.