/உள்ளூர் செய்திகள்/சேலம்/தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 12, 2024 06:43 AM
வீரபாண்டி : வீரபாண்டியில் விநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பண்ணார், சப்த கன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிேஷக விழா, நேற்று காலை கணபதி யாகத்துடன் முறைப்படி தொடங்கியது. தொடர்ந்து மகா லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரக யாகங்கள், பூர்ணாஹூதியுடன் முடிந்தது. பின் அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் இருந்து, 'ஜல்லிக்கட்டு காளை' கன்றுடன் பசுமாடு, குதிரை புடைசூழ, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள், புனிதநீர் நிரப்பிய கலசங்களை தலையில் சுமந்து வந்து, பத்ரகாளியம்மனுக்கு ஊற்றி வழிபட்டனர். மேலும் மாலை முதல் இரவு வரை முதல் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், 'அஷ்டபந்தன' மருந்து சாத்துதல் நடந்தன.
இன்று காலை, 2ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, அதில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து காலை, 6:00 முதல், 7:20 மணிக்குள், விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்துகின்றனர். பின் அன்னதானம் வழங்கப்படும்.