Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/'டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,200 பேர்'

'டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,200 பேர்'

'டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,200 பேர்'

'டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,200 பேர்'

ADDED : ஜூன் 12, 2024 06:43 AM


Google News
சேலம் : டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:

பருவ மழை கால நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல தண்ணீரில் மட்டும் டெங்கு கொசு உற்பத்தியாவதால், வீட்டில் நீண்ட நாளாக சேகரித்து வைக்கப்படும் தண்ணீர் பாத்திரங்கள், தொட்டி, குளிர்சாதன பெட்டி பின்புறம் தேங்கும் தண்ணீர், வீட்டின் சுற்றுப்புறத்தில் கிடக்கும் பழைய டயர், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகளில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

அதற்கு காய்ச்சல் முகாம் நடத்தி உரிய சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு தனி பிரிவு செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சளி, காய்ச்சல் வந்தால் அலட்சியப்படுத்தாமல், தானாக மருந்து, மாத்திரை உட்கொள்ளாமல், அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.

ஊராட்சியில் தலா, 20 பேர், டவுன் பஞ்சாயத்தில், 10, நகராட்சியில், 30, மாநகராட்சியில், 400 பேர் என, 1,200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணி, புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி துாவுதல் உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடுகள் தோறும் சென்று மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொது சுகாதாரம், உள்ளாட்சி துறையினர் இணைந்து, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us