ADDED : ஜூன் 01, 2025 01:34 AM
கெங்கவல்லி ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மே, 28ல் தொடங்கியது. நேற்று அலகு குத்துதல் விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அக்கரை மாரியம்மன் கோவிலில் கிடா
வெட்டுதல் நடந்தது. ஏராளமான
பக்தர்கள் வழிபட்டனர்.