Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/போதை பொருட்களின் குடோன் தமிழகம் பா.ஜ., மாநில துணைத்தலைவர் குற்றச்சாட்டு

போதை பொருட்களின் குடோன் தமிழகம் பா.ஜ., மாநில துணைத்தலைவர் குற்றச்சாட்டு

போதை பொருட்களின் குடோன் தமிழகம் பா.ஜ., மாநில துணைத்தலைவர் குற்றச்சாட்டு

போதை பொருட்களின் குடோன் தமிழகம் பா.ஜ., மாநில துணைத்தலைவர் குற்றச்சாட்டு

ADDED : ஆக 05, 2024 06:48 AM


Google News
பனமரத்துப்பட்டி: ''தமிழகம் போதைப்பொருட்களின் குடோனாக மாறியுள்ளது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் குற்றம்சாட்-டினார்.

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், சேலம் லோக்-சபா தொகுதி பா.ஜ., அலுவலகத்தில், வீரபாண்டி தொகுதி நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில அமைப்பு பொது செயலர் கேசவவிநாயகம், வலிமையான பூத் கமிட்டி அமைத்தல்; மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்க-ளிடம் கொண்டு சேர்த்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். கிழக்கு மாவட்ட பொது செயலர் ராஜேந்திரன், மாநகர் தலைவர் சுரேஷ்பாபு, வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தை மறைக்கவே, நிதி நிலை அறிக்கை குறித்து, தி.மு.க., போராட்டம் நடத்துகிறது. தமிழக அரசு, அதன் ஆட்சியின் தகுதியின்மையை மறைக்க, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சரியில்லை. மாநிலம் புறக்கணிக்கப்பட்டது என சொல்கிறது.

தமிழக வரலாற்றில் உள்துறை செயலர் உள்பட, 65 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட, 116 போலீஸ் உயர் அதிகாரிகள், ஒரே நேரத்தில் ஏன் மாற்றப்பட்டார்கள்? நிர்-வாகத்தில் தவறு உள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழுந்துள்-ளது. அதனால்தான், இந்த அதிகாரிகள் மாற்றம். எங்கு நோக்-கினும் ரவுடியிசம், கடத்தல், பணத்துக்கு கொலை செய்தல், போதை பொருட்கள் விற்பனை, தமிழகத்தை மையமாக வைத்து நடக்கிறது. தமிழகம் போதைப்பொருட்களின் குடோனாக மாறி-யுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us