/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநில கைப்பந்து போட்டி: சென்னை, சேலம் அணி வெற்றிமாநில கைப்பந்து போட்டி: சென்னை, சேலம் அணி வெற்றி
மாநில கைப்பந்து போட்டி: சென்னை, சேலம் அணி வெற்றி
மாநில கைப்பந்து போட்டி: சென்னை, சேலம் அணி வெற்றி
மாநில கைப்பந்து போட்டி: சென்னை, சேலம் அணி வெற்றி
ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
மேட்டூர் : மேட்டூரில், மூன்று நாட்கள் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வீரர், வீராங்கனை பிரிவில் சென்னை, சேலம் அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு கைப்பந்து கழகம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், அருள்நம்பி விளையாட்டு குழுமம் சார்பில், 21வது மாநில வீரர், வீராங்கனைகளுக்கான கைப்பந்து சாம்பியன் போட்டி மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த, 14ல் துவங்கி துவங்கி நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது. 26 வீரர்கள் அணி, 24 வீராங்கனை அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதில், வீரர்களுக்கான இறுதி போட்டியில் சென்னை, திண்டுக்கல் அணிகள் மோதின. திண்டுக்கல் அணி, 20 புள்ளிகள் எடுத்தது. சென்னை அணி, 27 புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தது. வீரங்கனைகள் பிரிவில் சென்னை அணி, 25 புள்ளிகள் எடுத்த நிலையில், சேலம் அணி, 32 புள்ளிகளுடன் வெற்றி பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றது.வீரர்கள் பிரிவில் முதலிடம், இரண்டாமிடம் பிடித்த சென்னை, திண்டுக்கல், வீராங்கனைகள் பிரிவில் சேலம், சென்னை அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.