/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்! தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரைஅரசு திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்! தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரை
அரசு திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்! தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரை
அரசு திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்! தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரை
அரசு திட்டங்களை எடுத்துக்கூறுங்கள்! தி.மு.க.,வினருக்கு மா.செ., அறிவுரை
ADDED : பிப் 25, 2024 03:57 AM
இடைப்பாடி: இடைப்பாடி சட்டசபை தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலர்கள், கிளை செயலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், அதன் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி தலைமை வகித்து பேசியதாவது:
ஆட்சியில் இருந்தால் தான் கட்சியினருக்கும், மக்களுக்கும் ஏதாவது செய்ய இயலும். அதனால் வரும் தேர்தலில் வெற்றி பெற, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள, 'வீடுதோறும் ஸ்டாலின்' திட்டம் மூலம், மக்களின் வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகள் நேரடியாக சென்று, அரசு திட்டங்களை எடுத்து கூற வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் இடைப்பாடி தொகுதியில் அதிக ஓட்டுகளை பெற கட்சியினர் தேர்தல் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நகர செயலர் பாஷா, தொகுதி பொறுப்பாளர் பரணிமணி, மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், ஒன்றிய செயலர்கள் பரமசிவம், நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.