Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்

மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்

மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்

மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்

ADDED : பிப் 25, 2024 04:14 AM


Google News
சேலம்: சேலம் மாநகராட்சியில் நாளை, சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து அதன் கமிஷனர் பாலச்சந்தர் அறிக்கை:

நடப்பு நிதியாண்டின், 2ம் அரையாண்டு வரையான, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, காலியிடம், தொழில் வரிகள், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை மக்கள் செலுத்துவதற்கு வசதியாக, சிறப்பு வரி வசூல் முகாம்கள், பிப்., 26ல்(நாளை) நடக்க உள்ளன.

அதன்படி மண்டலம் வாரியாக நடக்க உள்ள இடங்கள்:

சூரமங்கலம் மண்டலம்: காமநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி; குரங்குச்சாவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி; பள்ளப்பட்டி துரைசாமி நகர் குழந்தைகள் நல வாழ்வு மையம்; சாமிநாதபுரம் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், பால் மார்க்கெட் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம்.

அஸ்தம்பட்டி மண்டலம்: திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம்; சின்னகொல்லப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி; மணக்காடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி; சீரங்கப்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்; சன்னதி தெரு இந்தியன் வங்கி அருகே.

அம்மாபேட்டை மண்டலம்: ஆதி செல்வ கணபதி தெரு துவக்கப்பள்ளி; தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி; காமராஜ் நகர் காலனி துவக்கப்பள்ளி; பாவடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி; குப்பைமேடு நடுநிலைப்பள்ளி.

கொண்டலாம்பட்டி மண்டலம்: பத்மாவதி அபார்ட்மென்ட்; கந்தப்பா காலனி முருகன் கோவில்; தர்மலிங்கம் தெரு சுப்ரமணிய சுவாமி கோவில்; மேட்டுத்தெரு நடுநிலைப்பள்ளி; சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெரு துவக்கப்பள்ளி.

மேலும் அன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்களும், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படும் என்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us