/உள்ளூர் செய்திகள்/சேலம்/சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழாசவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா
சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா
சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா
சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக 5ம் ஆண்டு விழா
ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 2019ல், 108 திவ்யதேச பெருமாள்களை தத்ரூபமாக சுதை சிற்பங்-களாக வடித்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
இதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா, நேற்று காலை கணபதி யாகத்துடன் துவங்கியது. தொடர்ந்து கலசங்கள் வைத்து கும்பாபிேஷக நிறைவு விழா, 108 மூலிகைகளை கொண்டு யாகம் நடத்தப்பட்-டது. மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மலர்மா-லைகளால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்பட்டது.ஆண்டு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.