/உள்ளூர் செய்திகள்/சேலம்/சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூலை 13, 2024 12:32 AM
சங்ககிரி : சேலம் மாவட்டம் சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம், 3ல் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.
நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதில் காவிரி ஆறு, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால், கோபுர கலசங்கள் மீது ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிேஷகத்தை நடத்தினர். தொடர்ந்து அந்த புனிதநீர், கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின் சோமேஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.