ADDED : ஜூன் 01, 2025 01:36 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், 100 சதவீத மானியத்தில், விவசாயிகளுக்கு உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.
குறிப்பாக குரால்நத்தம், கோணமடுவு பகுதிகளை சேர்ந்த, 15 விவசாயிகளுக்கு, அவர்களின் தோட்டத்துக்கே சென்று, பூச்சிகளை கட்டுப்படுத்தும் சூரிய விளக்கு பொறி, மின் கல தெளிப்பான், தார்ப்பாலின் ஆகியவற்றை, அட்மா குழு தலைவர் சந்திரசேகரன் வழங்கினார். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா உள் பங்கேற்றார்.