ADDED : ஜூன் 01, 2025 01:36 AM
சேலம், சர்வதேச அறிவியல் மற்றும் மனநல நிபுணர் மன்றம், யு.என்.எஸ்., ஆய்வு பேரவை இணைந்து, தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய தகவல் மைய தரவுப்படி, மேச்சேரியில் உள்ள மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறந்த பள்ளியாக, ஸ்ரீராக
வேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்தது.
இதை ஒட்டி, உடுமலைப்பேட்டையில் உலக அமைதி மையத்தில் நடந்த நிகழ்வில், ராகவேந்திரா மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளிக்கு, 'சிறந்த பள்ளி' விருது வழங்கப்பட்டது. விருதை, பள்ளி நிறுவனர் ராகவேந்திரா மணிவண்ணன், நிர்வாக அலுவலர் கவுசல்யா, இயக்குனர் சுகன்ராஜ் பெற்றுக்கொண்டனர். மேலும் பள்ளி முதல்வர் வனிதா, ஆசிரியர்கள் சுபாஷினி, தேன்மொழி ஆகியோருக்கு, சிறந்த ஆசிரியர்கள் விருதும், மாணவர்கள் பிருத்விராஜ், தேசிகா ஆகியோருக்கு, சிறந்த மாணவர் விருதும் வழங்கப்பட்டன.