/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுவாமி தெவத்திருவிழாக்களால் ரூ.3.45 கோடிக்கு ஆடுகள் விற்பனை சுவாமி தெவத்திருவிழாக்களால் ரூ.3.45 கோடிக்கு ஆடுகள் விற்பனை
சுவாமி தெவத்திருவிழாக்களால் ரூ.3.45 கோடிக்கு ஆடுகள் விற்பனை
சுவாமி தெவத்திருவிழாக்களால் ரூ.3.45 கோடிக்கு ஆடுகள் விற்பனை
சுவாமி தெவத்திருவிழாக்களால் ரூ.3.45 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜூன் 08, 2025 01:25 AM
இடைப்பாடி, சேலம் மாவட்டம் இடைப்பாடி, கொங்கணாபுரம், அதன் சுற்றுப்பகுதிகளில் தெவத்திருவிழா சமீப நாட்களாக அதிகளவில் நடந்து வருகிறது.
இதனால் நேற்று கூடிய கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு, கடந்த வாரத்தை விட, 350 ஆடுகள் அதிகமாக, 4,450 ஆடுகளை கொண்டு வந்தனர்.
ஆடுகளை வாங்கவும் ஏராளமானோர் குவிந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 9,200 முதல், 9,750 ரூபாய், 10 கிலோ செம்மறியாடு, 8,750 முதல், 9,250
ரூபாய் வரை விலைபோனது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''குலதெய்வ சுவாமி தெவத்திருவிழாக்கள் அதிகளவில் நடப்பதால், சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்தது. 4,450 ஆடுகள் மூலம், 3.45 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது,'' என்றார்.