/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மதுரையில் அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு மதுரையில் அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு
மதுரையில் அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு
மதுரையில் அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு
மதுரையில் அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., வரவேற்பு
ADDED : ஜூன் 08, 2025 01:25 AM
அவனியாபுரம், மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று (ஜுன் 8) நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு நேற்றிரவு 10:40 மணிக்கு வந்தார்.
கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை, மாநில பொது செயலர் சீனிவாசன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் கே.ராஜூ, உதயகுமார் வரவேற்றனர். பின் தனியார் ஓட்டலில் அமித்ஷா தங்கினார். இன்று காலை 11:20 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா தரிசனம் செய்கிறார். பின், மாலை 4:05 மணிக்கு பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அமித்ஷா வருகையையொட்டி நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.