ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
வீரபாண்டி : குடிநீர் குழாய் உடைந்து, அரிப்பினால் ஏற்பட்ட பள்ளம் மூடப்பட்டுள்ளது.
ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் சாலையில் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில், தற்போது மேல்பகுதி மண்ணை தோண்டி, சிமென்ட் கலவை கலந்த மண்ணை கொட்டும் பணி கடந்த, 20 நாட்களாக நடந்து வருகிறது. பெரிய மாரியம்மன் கோவில் எதிரில், குடிநீர் குழாய்களில் ஒன்று உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாகி, சாக்கடையில் கலப்பதோடு, தார்ச்சாலை அரித்து பள்ளம் விழுந்திருந்தது.சாக்கடை கால்வாய்க்கு அருகில் உடைப்பு ஏற்பட்ட பள்ளம் உள்ளதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, குழாய் உடைப்பினால் ஏற்பட்ட பள்ளத்தை மண் கொட்டி மூடியுள்ளனர்.