/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவுசேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு
ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
பனமரத்துப்பட்டி : கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி பிரிவு ஆகிய இடங்களில், உயிர் பலியை தடுக்க, நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில், தாசநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி பிரிவு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில், தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் நெடுஞ்சாலையை கடக்கின்றனர். அப்போது, அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். விபத்தை தடுக்க, தாசநாயக்கன்பட்டியில் மட்டும் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலர் மோகன் கூறியதாவது: தாசநாயக்கன்பட்டியில், மேம்பாலம் கட்டுமான பணி இரண்டு ஆண்டுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடக்கிறது. பாலம் பணியை விரைவாக முடிக்க கடந்த, 7ல், சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள், கட்சி நிர்வாகிகளை சேலம் தாசில்தார், நெடுஞ்சாலை அதிகாரிகள், மல்லுார் போலீசார் அழைத்து, சேலம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 2024 டிசம்பருக்குள் மேம்பாலம் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், கட்டப்படும் மேம்பாலத்தின் இருபுறத்திலும் உள்ள சர்வீஸ் சாலையை, இரண்டு வாரத்திற்குள் சீரமைத்தல், பாலம் கட்டப்படும் பகுதியை சுத்தம் செய்தல், நாழிக்கல்பட்டி பிரிவு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில், இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்படும் என, நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.இவ்வாறு கூறினார்.