சம்பங்கி பூ கிலோ 15 ரூபாயாக சரிவு
சம்பங்கி பூ கிலோ 15 ரூபாயாக சரிவு
சம்பங்கி பூ கிலோ 15 ரூபாயாக சரிவு
ADDED : ஜூன் 03, 2025 01:11 AM
சேலம், சேலம் மார்க்கெட்டில் கடந்த, 20 நாட்களாக சம்பங்கி பூக்களின் விலை படிப்படியாக குறைந்து நேற்று கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பூ வியாபாரி விஜயகுமார், 40, கூறியதாவது:
சேலம் சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான கோவில் திருவிழாக்கள் முடிந்து விட்டதால், பூக்களின் தேவை குறைந்து, வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. குறிப்பாக ஒரு மாதத்துக்கு முன்பு வரை கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்ற சம்பங்கி பூ கடந்த, 20 நாட்களாக கிலோ, 10 முதல், 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதே போல், அனைத்து பூக்களின் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்த மல்லிகை பூ நேற்று, 300, கிலோ, 250க்கு விற்பனை செய்த முல்லை பூ, 200 ரூபாய், 200க்கு விற்ற காக்கட்டான், 160, 150க்கு விற்ற அரளி, 100 ரூபாய், 250க்கு விற்பனை செய்த சாமந்தி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார்.