ADDED : ஜூன் 02, 2025 06:55 AM
சேலம்: தமிழக போலீஸ் துறையில், 25 ஆண்டு பணி முடிக்கும் ஏட்டுகளுக்கு, எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில், 2000ம் ஆண்டில் பணியில் சேர்ந்த, 10 ஏட்டுகளுக்கு, எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கருமந்துறை நித்யானந்தம்; மகுடஞ்சாவடி நடேசன்; கருமலைக்கூடல் ராதாகிருஷ்ணன்; நங்கவள்ளி வெங்கடேசன்; மல்லுார் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு கேசவன்; ஆத்துார் ஊரகம் ஆனந்தன்; பனமரத்துப்பட்டி செந்தில்குமார்; தாரமங்கலம் சிவப்பிரகாசம்; மாவட்ட ஆயுதப்படை நாராயணன், சாமிநாதன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.