ADDED : பிப் 24, 2024 03:34 AM
இன்று தி.மு.க., கூட்டம்
சேலம்: தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி அறிக்கை: 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' தலைப்பில் திண்ணை பிரசாரம், மார்ச், 1ல் முதல்வரின், 71வது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்பாக ஆலோசிக்க, பிப்., 24(இன்று) மதியம், 3:30 மணிக்கு, இடைப்பாடி சட்டசபை தொகுதி, நைனாம்பட்டியில் உள்ள நடராஜன் மஹால் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
அதேபோல் மேட்டூர் தொகுதியில் நவப்பட்டியில் உள்ள திருமலை மாதவி மஹாலில், நாளை காலை, 8:30 மணிக்கும், சங்ககிரி தொகுதியில், நாளை காலை, 11:00 மணிக்கு, சங்ககிரி - பவானி பிரதான சாலையில் உள்ள வாசுதேவ் மஹால் திருமண மண்டபத்திலும் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கட்சியினர் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்மேட்டூர்: தமிழ்நாடு மின் தொழிலாளர்கள் சம்மேளன, 67ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மேட்டூர் அனல்மின் நிலையம் முன், நேற்று காலை, 8:15 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்த வேண்டும்; களப்பணியாளர்களுக்கு பணி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேட்டூர் அனல்மின் நிலைய சம்மேளன கிளை செயலர் ராஜேந்திரன், உப தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.