ஜவுளி கடையில் ரூ.6.85 லட்சம் 'அபேஸ்'
ஜவுளி கடையில் ரூ.6.85 லட்சம் 'அபேஸ்'
ஜவுளி கடையில் ரூ.6.85 லட்சம் 'அபேஸ்'
ADDED : செப் 03, 2025 01:16 AM
சேலம்:சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளி கடையின் மேற் கூரையை துளையிட்டு, 6.85 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
சேலம், கன்னங்குறிச்சி, பிரகாசம் நகரை சேர்ந்தவர் மணி, 37. இவர், சேலம், 5 ரோடு அருகே, சாரதா கல்லுாரி சாலையில், ஆக., 27ல் புதிதாக ஜவுளிகடை திறந்தார்.
அங்கு, 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு, மணி கடையை பூட்டிச்சென்றார்.
நேற்று காலை கடை திறந்த போது, கூரை துளையிட்டு இருப்பது தெரியவந்தது. கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையில் இருந்த, 6.85 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது.