ADDED : செப் 03, 2025 12:55 AM
மேட்டூர்:மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில், தேனீக்கள் கொட்டியதில், 18 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதில், 4வது அலகு, 15 நாள் பராமரிப்பு பணிக்கு, ஆக., 1 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நேற்று காலை, 10:00 மணிக்கு, அந்த அலகில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு பிரிவுக்கு பராமரிப்பு பணி தொடங்கி, பூஜை போடப்பட்டது.
அப்போது சாம்பிராணி புகை பரவியதால், அப்பகுதி கூட்டில் இருந்து தேனீக்கள் வெளியேறின.
ஒப் பந்ததாரர் பிரபாகரன், அனல்மின் நிலைய பொறியாளர்கள் தனலட்சுமி, சிவகாமி, தொழில்நுட்ப உதவியாளர் மகேஸ்வரி, கோகுலகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சண்முகவேல் உட்பட, 18 பேரை தேனீக்கள் கொட்டின. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.