/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சிஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
ADDED : ஜன 13, 2024 08:55 AM
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் செக்காரமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில், மர்ம நபர்கள் புகுந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர்.
தொடர்ந்து கடையில் இருந்த லாக்கரை உடைக்க முற்பட்டபோது, அவற்றை உடைக்க முடியவில்லை. பிராந்தி பாட்டில்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.