/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கதவை திருடி விற்ற 2 பேருக்கு 'காப்பு' கதவை திருடி விற்ற 2 பேருக்கு 'காப்பு'
கதவை திருடி விற்ற 2 பேருக்கு 'காப்பு'
கதவை திருடி விற்ற 2 பேருக்கு 'காப்பு'
கதவை திருடி விற்ற 2 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 01, 2025 02:08 AM
நங்கவள்ளி;நங்கவள்ளி அருகே வனவாசியை சேர்ந்த, விவசாயி சதீஷ்குமார், 49. இவர் நேற்று, அருகே உள்ள அவரது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கிரில் கேட்டை காணவில்லை. அவர் தேடியபோது, வனவாசி, மேல் ரோட்டில் உள்ள பழைய இரும்புக்கடையில் இருந்தது.
விசாரித்தபோது இருவர் விற்றது தெரிந்தது. தொடர்ந்து அவர் புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரித்ததில், வனவாசியை சேர்ந்த விஜய், 26, குட்டப்பட்டி சூர்யா, 21, ஆகியோர் திருடியது தெரிந்தது. அவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.