Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உயிரியல் பூங்காவில்வண்ண மீன்கள் காட்சியகம்

உயிரியல் பூங்காவில்வண்ண மீன்கள் காட்சியகம்

உயிரியல் பூங்காவில்வண்ண மீன்கள் காட்சியகம்

உயிரியல் பூங்காவில்வண்ண மீன்கள் காட்சியகம்

ADDED : செப் 01, 2025 02:07 AM


Google News
சேலம்:சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், மான், குரங்கு, வெளிநாட்டு பறவைகள், மயில் உள்ளிட்டவை, பார்வையாளர்களுக்காக தனித்தனி கூண்டுகளில் வைத்து பாரமரிக்கப்படுகிறது. சறுக்கு மரம், சீசா, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தை

கள் விளையாட்டுகள், புலி, கரடி, சிறுத்தை, யானை போன்ற விலங்குகளின் தத்ரூப சிற்பங்கள், செயற்கை நீருற்றுகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்நிலையில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு பெரிய தொட்டிகள், 4 சிறு தொட்டிகளில், 12 வகைகளில், பல்வேறு வண்ணங்களில் உள்ள, 1,800 மீன்கள், அலங்கார மீன் காட்சியகமாக தயார் செய்து, கடந்த வாரம் முதல், மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. மீன் காட்சி

யகத்துக்கு என தனி கட்டணம் கிடையாது. நுழைவு கட்டணத்திலேயே அடங்கும். அதனால் செவ்வாயன்று பூங்காவுக்கு விடுமுறை என்பதால், மற்ற நாட்களில் வண்ண மீன்கள் காட்சியகத்தை பார்வையிடலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us