/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாங்காய்க்கு உரிய விலை கேட்டு ஆர்ப்பாட்டம் மாங்காய்க்கு உரிய விலை கேட்டு ஆர்ப்பாட்டம்
மாங்காய்க்கு உரிய விலை கேட்டு ஆர்ப்பாட்டம்
மாங்காய்க்கு உரிய விலை கேட்டு ஆர்ப்பாட்டம்
மாங்காய்க்கு உரிய விலை கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2025 02:14 AM
இடைப்பாடி, மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு குறைந்த விலையே கிடைப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி, மா.கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், சங்ககிரி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அதில் ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 4 ரூபாய் மானியம் வழங்குவது போல் தமிழகத்தில் மானியம் வழங்கவும் வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலர் ராமமூர்த்தி, துணை தலைவர்கள் தங்கவேல், ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.