/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேர்வராயன் கோவில் தேரோட்டம் காபி கொட்டைகளை வீசிய பக்தர்கள் சேர்வராயன் கோவில் தேரோட்டம் காபி கொட்டைகளை வீசிய பக்தர்கள்
சேர்வராயன் கோவில் தேரோட்டம் காபி கொட்டைகளை வீசிய பக்தர்கள்
சேர்வராயன் கோவில் தேரோட்டம் காபி கொட்டைகளை வீசிய பக்தர்கள்
சேர்வராயன் கோவில் தேரோட்டம் காபி கொட்டைகளை வீசிய பக்தர்கள்
ADDED : ஜூன் 11, 2025 02:14 AM
ஏற்காடு.
சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அப்போது சூரை தேங்காய், காபி கொட்டைகளை, தேர் மீது பக்தர்கள் வீசினர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் குகை கோவிலில், வைகாசி திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று மகா தீபாராதனை நடந்தது. மதியம், 2:15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராய பெருமாள், காவேரியம்மாள் சுவாமிகளை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து தேரோட்டம்
நடந்தது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., சித்ரா, தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன், அறங்காவலர் குழுவினர், உள்ளூர் பக்தர்கள், ஏற்காட்டை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மக்கள் இணைந்து, வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். அப்போது மலைக்கிராம மக்கள், அவர்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சுவாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபட்டனர்.
சிறப்பு பஸ்கள்
சூரை தேங்காய்கள், சில்லரை காசுகள், காபி கொட்டைகள், மிளகு, கல் உப்பு ஆகியவற்றை, தேர் மீது பக்தர்கள் வாரி இறைத்தனர். கோவில் வளாகத்தை சுற்றி தேர் வந்தது.
பின் ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள, 69 மலைக்கிராம மக்கள், சுற்றுலா பயணியர் தரிசனம் செய்தனர்.
இதற்கு போக்குவரத்து துறை மூலம், ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. சேர்வராயன் கோவில் மலைப்பாதையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.