/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு 2 விருதுகள் வழங்கல்ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு 2 விருதுகள் வழங்கல்
ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு 2 விருதுகள் வழங்கல்
ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு 2 விருதுகள் வழங்கல்
ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு 2 விருதுகள் வழங்கல்
ADDED : ஜூன் 29, 2024 02:41 AM
சேலம்: பெங்களூரில், தேசிய பள்ளி விருதுகள் வழங்கும் நிறுவனம் சார்பில், 2024க்கு தேசிய அளவில் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
அதில், சேலம், சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு, அதிக தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக்கொண்ட சிறந்த பள்ளி; சிறந்த கல்விக்கான தொலைநோக்கு பார்வை என, இரு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை, அப்பள்ளி தாளாளர் தினேஷ் பெற்றுக்கொண்டார். இது நிறுவனம், ஆசிரியர்கள், ஊழியர் அர்ப்பணிப்புக்கு ஊக்கமூட்டும் விதமாக உள்ளதாக, அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.