/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அறுவடை இயந்திரத்தில் விவசாயி கை சிக்கி சேதம் அறுவடை இயந்திரத்தில் விவசாயி கை சிக்கி சேதம்
அறுவடை இயந்திரத்தில் விவசாயி கை சிக்கி சேதம்
அறுவடை இயந்திரத்தில் விவசாயி கை சிக்கி சேதம்
அறுவடை இயந்திரத்தில் விவசாயி கை சிக்கி சேதம்
ADDED : ஜூன் 29, 2024 02:41 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர், வடக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த விவசாயி சரவணன், 28. நேற்று மக்காச்சோள அறுவடை செய்து, அதன் இயந்திரத்தில் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அறுவடை இயந்திரத்தில் சரவணனின் வலது கை சிக்கியுள்ளது. இயந்திரத்தை நிறுத்தியபோதும், கை சேதமானது. படுகாயமடைந்த அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.