/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல்வர் வருகை விழா ஏற்பாடு முன்னேற்பாடு பணிகள் மும்முரம் முதல்வர் வருகை விழா ஏற்பாடு முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
முதல்வர் வருகை விழா ஏற்பாடு முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
முதல்வர் வருகை விழா ஏற்பாடு முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
முதல்வர் வருகை விழா ஏற்பாடு முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
ADDED : ஜூன் 07, 2025 01:18 AM
சேலம், :சேலத்துக்கு வரும், 11,12ல் முதல்வர் வருகை தருவதையொட்டி, அனைத்து முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு பின், கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: டெல்டா பாசனத்துக்காக வரும், 12ல், மேட்டூர் அணை திறப்பையொட்டி, அப்பகுதியில் 2 ஆம்புலன்ஸ், சேலத்தில் விழா நடக்கும் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 2 ஆம்புலன்ஸ் என, மொத்தம் 4 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பங்கேற்கும் விழா மேடை மற்றும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் ஒவ்வொரு எல்இடி., 'டிவி'க்கும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் பாதுகாப்பு மேற்கொள்வர். முதல்வர் தங்கும் விருந்தினர் மாளிகை, புதுப்பொலிவு பெற செய்து, 4 ஆண்டு சாதனை விளக்க வரைப்படங்கள் வைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
மதியம், 2:00 மணியளவில் பயனாளிகளை, மேடைக்கு அழைத்து வருதல், விழா மேடையில் அரங்கேற்றப்படும் கலை நிகழ்ச்சிக்கு காலை, 8:00 - 1:00 மணி வரை மட்டும் அனுமதி வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.