/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நடிகர் விஜயை கண்டித்து சேலத்தில் போஸ்டர் நடிகர் விஜயை கண்டித்து சேலத்தில் போஸ்டர்
நடிகர் விஜயை கண்டித்து சேலத்தில் போஸ்டர்
நடிகர் விஜயை கண்டித்து சேலத்தில் போஸ்டர்
நடிகர் விஜயை கண்டித்து சேலத்தில் போஸ்டர்
ADDED : ஜூன் 07, 2025 01:17 AM
சேலம் ;தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமீபத்தில் சேலத்தில் நடந்த கூட்டத்தில், நடிகரை, நடிகராக பாருங்கள், நடிகரை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து கொள்வது தவறு என விமர்சித்தார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதும், தமிழக வெற்றிக் கழகத்தினர், வேல்முருகனை கண்டித்து, பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் கலெக்டர் அலுவலக ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் விஜயை கண்டித்தும், அவரது கட்சியினரை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில், எச்சரிக்கை, எச்சரிக்கை, நேற்று பெய்த மழையில் பூத்த காளானே போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், விஜய் போட்டோ மீது பெருக்கல் குறியிட்டு, அவர் தவறானவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் அமைந்துள்ளது.