/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிப்புரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிப்பு
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிப்பு
ADDED : ஜூன் 21, 2024 07:28 AM
பனமரத்துப்பட்டி : சேலம் - கரூர் அகல ரயில்பாதை, மல்லுார் - வேங்காம்பட்டி தார்ச்சாலை குறுக்கே செல்கிறது.
தினமும் ஏராளமான சரக்கு ரயில்கள் செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் மட்டுமின்றி, பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதால், 100க்கும் மேற்பட்டோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க, டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. சேலம் மாவட்ட நிர்வாகத்தினர், ரயில்வே அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்து, சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து அய்யனார் கூறுகையில், ''சேலம் - கரூர் ரயில் பாதை கேட் எண்: 5ல் சுரங்கப்பாதை அமைக்க, ரயில்வே நிர்வாகம், 5.19 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. ஒப்பந்தம் விடும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹாவை சந்தித்து நன்றி தெரிவித்து, சுரங்க பணிகளை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தினோம்,'' என்றார்.