/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பூஜை வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பூஜை
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பூஜை
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பூஜை
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பூஜை
ADDED : ஜூன் 10, 2025 12:59 AM
ஆத்துார் ஆத்துார் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
ஆத்துார் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. நேற்று, முருகன் அவதரித்த நாளாக கருதப்படும் வைகாசி விசாகத்தையொட்டி, மூலவர் பாலசுப்ரமணியருக்கு, 16 வகை அபி ேஷகம் செய்த பின், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அதேபோல் ஆத்துார் அடுத்த, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து, சாக்லெட் மாலை, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், முருகனுக்கு பன்னீர் அபிேஷகம் செய்து வழிபாடு செய்தனர்.
தம்மம்பட்டி திருமண்கரடு, வீரகனுார் குமரன்மலை, கெங்கவல்லி முருகன், ஆத்துார் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* நங்கவள்ளியில் உள்ள, சவுந்திரவல்லி சமேத சோமேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு, மாம்பழம் கனி அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதேபோல், லட்சுமிநரசிம்மர் கோவிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, நரசிம்மர் மாம்பழம் கனி அலங்காரத்தில், கருடவாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஓமலுார் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள, செந்திலாண்டவர் சுவாமிக்கு, பாலாபிஷேகம் நடந்தது.* தாரமங்கலம், சக்தி மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, சுப்ரமணிய முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் சுப்ரமணிய முத்துக் குமாரசுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு அலங்காரம் செய்து யாகவேள்வி செய்தனர்.
பின் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க, சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண கோலத்தில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா சென்றார்.